சித்தர்கள் யாவரும், எம்பெருமான் சிவனின் அனுக்கிரகத்தினால், அவராலேயே பூமிக்கு அனுப்பப் பட்டவர்கள்; சிவனின் அம்சமானவர்கள்; சமூகச் சூழலுக்கேற்ப, சிவனிட்ட கட்டளைகளை நிறைவேற்றவே பூமியில் அவதாரம் பெற்றவர்கள்.🌺
🌺ஸ்ரீகாகபுஜண்ட மகரிஷியின் மாணவராகிய கோரக்க சித்தர், தமது "மலைவாகடம்" என்று சொல்லப்படும் நூலில் உள்ள கருத்துப்படி, "ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி யுகம் யுகமாய் வாழ்ந்து வருவதாக அறியப்படுகிறது. ஸ்ரீகாகபுஜண்ட மகரிஷியின் "பெருநூல் காவியமும்" இதனையே தெளிவுப்படுத்துகிறது.🌺
🌺பிரளயம் முடிந்து சிருஷ்டி ஆரம்பித்த வேளையில் பிரம்மா,விஷ்ணு,ருத்திரன் ஆகியோர் படைக்கப்பட்டவுடன், உயிர்களின் சிருஷ்டி பிரம்மாவிடம் ஒப்படைக்கப்பட்ட போது அவர் மிகுந்த குழப்பத்தில் ஆழ்ந்தார். இந்த குழப்ப நிலையையும் மனக் கலக்கத்தையும் அறிந்த கலைவாணி, இப்பிரச்சனை தீர கடும் தவம் இயற்றினார். முடிவில் , கலைவாணியின் முன்தோன்றிய சிவபெருமான், "காகபுஜண்டன்" என்னும் ஞானக் குழந்தையை உருவாக்குகிறேன். அக்குழந்தை ஆதிகுருவாகவும் சிரஞ்சீவியாகவும் இருந்து அனைத்து தேவ ரகசியங்களையும் உபதேசிக்கும். அதன்படி உன் கணவன் பிரபஞ்ச சிருஷ்டியை செய்வானாக!" என்று அருளிச் செய்து , தமது நெற்றிக்கண்ணில் இருந்து கதிர்வீச்சினை செலுத்தி அக்கதிர் வீச்சினையே ஒரு குழந்தையாக்கி தந்தார். 🌺
🌺நெற்றிக்கண்ணுடன் பிறந்த அக்குழந்தையை மூவரும், முப்பத்து முக்கோடி தேவரும் பூமாரி பொழிந்து ஆசிர்வதித்தனர். அவ்வாறு பிறந்த ஸ்ரீகாகபுஜண்ட மகரிஷி, பிரம்மாவுக்கே உபதேசம் செய்ததால் "தேவரிஷி" எனப் போற்றப்பட்டார். இவ்வளவு பெருமைகள் உடைய ஸ்ரீகாகபுஜண்ட மகரிஷியின் துணைவியார்தான் ஸ்ரீபகுளாதேவி ஆவார்.🌺
🌺இவ்வாறே சிவக்கருணையினால் கும்பத்தில் பிறந்தவரே கும்பமுனி என்றும் குருமுனி என்றும் நாம் அன்போடு அழைத்து மகிழும் ஸ்ரீஅகஸ்திய மகரிஷி ஆவார்.கோடான கோடி சித்தர்களை உருவாக்கி, உலகிற்கு தந்தவரும் இவரே. சிவபெருமானின் அன்பிற்குரிய மகனாகவும், சித்தர்களின் தலைவராகவும், கோடான கோடி சித்தர்களால் போற்றப்படுபவரும் இவரே. எல்லா மதங்களிலும் அகஸ்தியரைப் பற்றி சான்றுகள் உள்ளதென, சமீபத்தில் ஜிவசமாதி அடைந்த சித்தரான, ஆன்மிக ஆராய்ச்சியாளர் ஸ்ரீ மிஸ்டிக் செல்வம் என்னும் தூயவர் விளக்கியுளாளார். அவரது ஆய்வுப்படி, கிறிஸ்துவர்கள் 'அகஸ்டஸ்' என்று அழைப்பதும், முஸ்லீம்கள் 'அகமது' என்று அழைப்பதும் நமது அகஸ்தியரையே குறிக்கும் என்று தெளிவுப்படுத்தியுள்ளார். அப்படிப்பார்க்கும் போது, உலகில் உள்ள எல்லா மனிதர்களும் நலமும் வளமும் பெற்று பிறவா பெருநிலை அடைய வேண்டும் என்கிற ஆத்ம தாகம் உடையவராக மகரிஷி ஸ்ரீஅகஸ்தியர் விளங்குவது நன்கு புரியும். ஸ்ரீ அகஸ்திய பெருமானுக்கு உறுதுணையாய், தக்க துணையாய் இருந்தவரே அவர் தம் துணைவியார் மாதா ஸ்ரீ லோபா முத்திரை ஆவார்

No comments:
Post a Comment