Monday, 20 June 2016

சிவ தீட்சை


சிவ  தீட்சை 
தீட்சை என்றால் உயிரைப்பற்றிய ஆணவ மலத்தைக் கெடுத்து  சிவஞானத்தை கொடுப்பது என்று பொருள் தமிழில் தீக்கை. உடலுக்கு பலசடங்குகள் செய்யப்படுகின்றன  அது போல உயிராகிய ஆன்மாவிற்கு செய்யக்கூடிய சடங்கே தீட்சை. எப்படி வாகனம் ஓட்ட ஓட்டுனர் உரிமம் தேவையோ நிலம் வாங்க நிலப்பதிவு அவசியமோ தொழில் துவங்க தொழில் உரிமம் தேவையோ அது போல சிவ சம்பந்தம் எனும் ஆரம்ப படி நிலையை உறுதிபடுத்தி கொள்ள இம்மை மருமை இன்பங்கள் அடைய சிவபெருமான் திருவருள் பெற உரிமம் (தீட்சை) தேவை .

7வயது முதல் எந்த வயதிலும் ஆண் பெண் இரு பாலரும் தீட்சை பெறலாம். தீட்சை  பெறாதவர் பொதுச்சைவர் எனப்படுவர் அவர்கள் திருநீற்றை நீரில் குழைத்து  திரிபுண்டரமாக  பூச முடியாது . நமசிவாய எனும் மிக உயர்ந்த மந்திரமான ஐந்தெழுத்தை உச்சரிக்க முடியாது. மாதா பிதா குரு தெய்வம் என்பது தான் சைவம் காட்டும் நெறி .எனவே குரு மூலம் தீட்சை பெற வேண்டும் .நமது சமய குரவர்களும் சந்தான குரவர்களும் நமக்கு அருளியது அதுவே அவர்கள் அருளியதே நமக்கு பிரமாணம் .ஸ்ரீ இராமனுக்கு அகத்தியரும், ஸ்ரீகிருஷ்ணனுக்கு உபமன்யு  முனிவரும் தீட்சை  செய்து வைத்துள்ளார்கள்   

ஏன் தீட்சை  பெற வேண்டும் :
 1.  சிவ பெருமானை ஆகமங்களில்  விதித்தபடி  வழிபாடு செய்வதற்கு உரிய  அதிகாரம் பெற்று ஐந்தெழுத்து ஓதி முப்புரிமாணமாக  திருநீறு அணிந்து பூசை செய்யலாம் . 
2. தீட்சை பெற்றால் ஞானம் பெறலாம் ஞானத்தின் வாயிலாக வீடுபேறு எனும் முக்தி பெறலாம்.
 3.சமய தீட்சை பெற்றாலே அவர்களை  எமன் அணுக மாட்டான் அதனால் நரகம் இல்லை அவ்வுயிரை வாங்க ஸ்ரீகண்ட பரமேஸ்வரன் தான் அதிகாரம் பெற்றவர் .
4.விசேட தீட்சை பெற்றால் அவ்வுயிரை அனந்த தேவர் வாங்குவார் 
5.நிர்வாண தீட்சை பெற்றால் சதாசிவ மூர்த்தி  வாங்குவார் .
6.எமன் வாங்காததால் நரக துன்பம்  ஆவி உலக துன்பங்கள் நம்மை அணுகாது .
7.நமது வாரிசுகள் நமக்கு பிதுர் கடன் ஆற்றா விட்டாலும் கூட ஆவியுலக இன்னல் இல்லை 
8.இறைவன் தீட்சா கிரியையின் மூலம் மட்டுமே பாவ மன்னிப்பு அருளுகிறார் 
9.பில்லி சூன்யம் ஏவல் கண்திருஷ்டி இவை நெருங்காது 
10.பிராணயாமம் செய்யும் போது இருதய நோய் வராது .மாரடைப்பு நெருங்காது .
11.சிவாகம பாவனைகள்  மூலம் மனம் அடங்கும் நிம்மதி கிட்டும் ஐம்பொறிகளும் நமக்கு குற்றேவல் புரியும் .அப்பர் பெருமான் அதை  பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி என்றதன் மூலம் அறியலாம்.பாவனை உயிரை தூய்மைப்படுத்தும் 
12.நியாசம் எனும் அங்கசுத்தி செய்வதன் மூலம் வியாதி நீங்கும் அது தான் இன்றைய ரெய்கி
13. 64 முத்திரைகள் பிடிப்பதால் பிசியோதெரபி  செய்யும் பலன் கிடைப்பதால் நரம்பு சம்பந்தமான வியாதிகள் நெருங்காது .
14. தீட்சையின் பெற்று  ஆன்மார்த்த பூஜை செய்வதன் மூலம் நமது வினைகள் குறையும்  (முற்பிறவி பாவங்கள் சஞ்சிதம்  ). ஆகாமியம் ஏறாது 

+++++++++++++++++++++++++++
அகத்தியர்_அருளிய_சிவ_தீட்சை

அகத்தியர் அருளிய முப்பத்தி இரண்டு சிவ தீட்சைகளில் முதல் எட்டு தீட்சைகளைப் பற்றி காண்போம். தீட்சைகளில் முதன்மையானது இந்த சிவ தீட்சைகள்தான்.

இந்த தீட்சைகளை முறையாக
குருவின் மூலமாயப்
பெற்று செபிக்க தீட்சைகள் சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.

"தீட்சையிலே முதற்தீட்சை சிவதீட்சைதான்

ஸ்ரீம் அம் ஓம்

யென்று லட்சம் ஜெபித்துவோதக் காட்சிபெறத் தேகமெல்லாம் வியர்வை காணும் கண்மாய்கை இல்லையடா கண்டுதேறு ஆச்சுதடா சிவதீட்சை ரெண்டுங்கேளு

ஆம் ஓம் ஹரீம் ரீம்

யென்று நீயும் மூச்சடா உள்ளடங்கும் லட்சமோத முத்தியுண்டாஞ் சத்தியுண்டாஞ் சித்தியாமே."

"ஸ்ரீம் அம் ஓம்"

என்று லட்சம் முறை செபிக்க முதல் தீட்சை சித்தியாகும். அப்போது இறைவனின் திருக்காட்சியைக் காணலாம் என்கிறார். காட்சியைக் காணும் போது தேகமெல்லாம் வேர்த்துப் போகும். ஆனால் இந்தக் காட்சி கண் மாயை அல்ல, இதைக் கண்டு தேறுவதே முதல் தீட்சையாகும் என்கிறார் அகத்தியர்.

"ஆம் ஓம் ஹரீம் ரீம்"

என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க இரண்டாவது தீட்சை சித்தியாகும். அப்போது மூச்சு உள்ளடங்குவதுடன் , முக்தியும், சக்தியும் சித்தியாகும் என்கிறார் அகத்தியர். "சித்தியாஞ் சிவதீட்சை மூன்றுகேளு செப்புவேன்

குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம்

யென்று லட்சம் பத்தியாய்ச் செய்துவர மோட்சமாகும் பாணுவைப்போற் தேகமெல்லாம் ஒளியுமாகும் துத்தியஞ்செய் சிவதீட்சை நாலுகேளு துடியுடனே ஸ்ரீங் அங் உங் கென்று முத்திபெற லட்சமுருச் செபித்தாற்சித்தி மோட்சமய்யா தேவதைகள் பணியுந்தானே."

"குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம்"

என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க மூன்றாவது தீட்சை சித்தியாகும். அப்போது சந்திரனை போல தேகம் ஒளிவீசும் என்கிறார்.

"ஸ்ரீங் அங் உங்"

என்று லட்சம் முறை செபிக்க நான்காவது தீட்சை சித்தியாகும். அப்போது மோட்சமும், தேவதைகள் உனக்கு பணியும் தன்மையும் ஏற்படும் என்கிறார் அகத்தியர். "பணிந்துதான் சிவதீட்சை அஞ்சுங்கேளு பண்பாக யங் வங் றீங் றுந்தான் துணிந்தோது லட்சமுருச் செபித்தாற்சித்தி தொண்டுசெய்வார் தேவதைகள் சட்டைக்கும் அணிந்துகொள்வாய் சிவதீட்சை ஆறுங்கேளு அன்புடனே

சங் ரங் உம் ஆம்

என்றுலட்சம் குனிந்துநிமிர் தேகமதில் வாசம் வீசும் குணமாகுந் தெகசித்தி சுருக்குத்தானே."

"யங் வங் றீங்"

என்று லட்சம் முறைசெபிக்க ஐந்தாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேவதைகள் ஒரு சட்டையைத் தரும். அதை அணிந்துகொள் என்கிறார்.

"சங் ரங் உம் ஆம்"

என்று லட்சம் முறை செபிக்க ஆறாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேகத்தில் வாசம் வீசும். அத்துடன் தேகசுத்தியும் சித்திக்கும் என்கிறார் அகத்தியர். "தானேசெய் சிவதழுட்சை ஏழுநீயும் சந்தோஸ மாய் ஓது

இங் ரங் அவ்வு

மென்று லட்சம் மானேந்தும் ஈசுவரனும் அருகில் நிற்பார் வானவர்கள் மகிழ்வாக வாவென்பார்கள் நானென்ற தீட்சையெட்டும் உற்றுக்கேளு நன்றாக

மங் றீங் ரா ரா

வென்று லட்சம் ஆனந்த முண்டாகுந் தேவர்வந்து அன்பாக உனைச்சேர்ந்து அணைவார்பாரே."

"இங் ரங் அவ்வு"

லட்சம் முறை செபிக்க, மானை கையில் ஏந்தி இருக்கும் சிவன் அருகில் இருப்பார். வானவர்கள் மகிழ்ச்சியுடன் வா வா என்று அழைப்பார்கள் என்கிறார் அகத்தியர்.

"மங் றீங் ரா ரா"

என்று லட்சம் முறை செபிக்க ஆனந்தம் உண்டாகும்.அத்துடன் தேவர்கள் வந்து உன்னுடன் இணைவார்கள் என்கிறார் அகத்தியர்

Tuesday, 7 June 2016

உத்தம குரு

உத்தம  குரு

இறையருள் பெற நாம் எண்ணும்போதே,
இறையருளால் உத்தம  குருவும்  வருவார்!
நாம்  நாடித் தேடிச் சென்றிடும்  முன்பே,
நம்மைத் தேடி வந்து விடுவார் அவரே!

உத்தம குரு  வெறும் மனிதர் அல்ல,
இறையே அந்த குரு  வடிவு எடுக்கும்!
உத்தம குருவும் இறையும் ஒன்றென
விரைவில் நாம் விளங்கிக்  கொள்வோம்.

மந்திரங்கள்  காதுகளில் உபதேசிப்பார்;
மனதில் வைராக்கியத்தை  வளர்ப்பார்;
அறிவில் விவேகம்தனை விதைப்பார்;
ஆன்மாவில் நாட்டம் கொள்ளச் செய்வார்.

ஜீவாத்மாவையும், அது அலைந்து  தேடிடும்
பரமாத்மாவையும், குரு  சேர்த்து  வைப்பார்;
பார்வை  அற்றவனுக்கு  வழி காட்டுவது போல,
நேர்மை மாறாத  நல்வழியில்  நம்மை நடத்துவார்.

கங்கையைப் போலப் புனிதமானவர் குரு;
விந்தைகள் பலப்பல புரிய வல்லவர் குரு;
நிந்தனையால்  அவர் உள்ளம் மாறுபடார்;
சிந்தனைச் சிற்பி என்பவரே நல்ல குரு.

மூன்று வகை வைத்தியர்கள் உண்டு;
மூன்று வகையினர்  குருவும் ஆவர்.
அதமம், மத்யமம்,  உத்தமம்  என நாம்,
அறியும் வகைகள் உண்டு இரண்டிலும்.

முதல் வகை வைத்தியர், நாடியைச் சோதித்து,
மருந்தை அளித்து விட்டுச்  சென்று விடுவார்.
முதல் வகை குரு நல்ல முறையில்  போதித்து,
“மகனே! இனி  உன் சமர்த்து!” என்றிடுவார்.

இரண்டாம் வகை  வைத்தியர் மருந்தை,
வற்புறுத்தி, வலியுறுத்தி உண்ண வைப்பார்.
இரண்டாம் வகை குரு, இனிய  சொற்களால்,
வற்புறுத்தி, நம்மை நல்வழிப்படுத்துவார்.

அடுத்த வகை வைத்தியர் நம்மை, “பாடு
படுத்தி”யேனும் மருந்தைச் செலுத்துவார்.
பலப்பிரயோகம்  செய்தேனும்  நம்மை,
நலம்பட வாழ்விப்பவரே ஒரு உத்தம குரு.

குருவருளும், இறைஅருளும் ஒன்றாய்க்
கூடி வரும்போது,  நம் உலக  வாழ்வில்
குறை இன்றிக் கோரினவை கைக்கூடும்.
குருவை வரவேற்கத்   தயாராகுங்கள்!