Sunday, 29 May 2016

மந்திரசாப நிவர்த்தி

மந்திரசாப நிவர்த்தி மந்திரம்
"ஓம் அங் உங் 
சிங் கிரீம் ஸ்ரீம் 
அவ்வும் சவ்வும் 
சகல மந்திர சாபம் 
நசி மசி சுவாகா"
இம்மந்திரத்தை அமாவாசை இரவில் சுத்தமான தனி அறையில்
பசு சாணத்தில் மெழுகி அதனுல் ஒரு குத்து விளக்கை ஏற்றி
வைத்து குளித்துவிட்டு வெள்ளை துணி அணிந்துகொண்டு அவ்விளக்கின் எதிரில் கிழக்கு நோக்கி அமர்ந்துகொண்டு
மன ஓர் நிலையோடு சித்தர்களை நினைத்து "அடியேன் ஓதும்
மந்திர சாபம் அறவே நீங்க அருள்தர வேண்டும்" என மனதார வணங்கவிட்டு  ருத்திரட்ச்ச மாலையை கையில் ஏந்தியவாறு கண்ணை மூடிக்கொண்டு மந்திரதை 1008உரு செபிக்க
மந்திரம் சித்தியாகும்.

1008 உரு செபிக்கும்வரை கண்ணை திறக்கக்கூடாது.
செபிக்கும் சமயத்தில் யாரோ அழைப்பது போலவும்,
உங்களை தொடுவது போலவும், பூச்சிகள் உடலில் ஊறுவது
போலவும், பின்பக்கமாக உங்களை தள்ளுவது போலவும்
தோன்றலாம் சிலருக்கு மயக்கம்கூட வருவது போல
இருக்கலாம் ஆனால் எக்காரணத்தைக்கொண்டும்
மந்திரத்தை 1008உரு செபித்து முடிக்கும் வரை  கண்ணை
திறக்காமல் செபித்தால்தான் சித்தி உண்டாகும் என்பதை
மனதில் கொள்ளவும்.

மந்திரம் சித்தியான பின்பு எந்த மந்திரத்தை செபிக்கும்
முன்பும் இம்மந்திரத்தை 9 உரு செபித்து பின்னர் செபிக்க
அதன் சாபம் நீங்கி அது சித்தியாகும்

Friday, 20 May 2016

பன்னீர் இலை விபூதி




திருசெந்தூர் முருகன் கோவில் பன்னீர் இலை விபூதி :

திருப்பதிக்கு லட்டு, பழனிக்கு பஞ்சாமிர்தம்....
என்கிற வரிசையில் திருசெந்தூர் முருகன் கோவிலின் சிறப்பு பிரசாதம் இலை விபூதி. பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவது தான் இது. எந்த கோவிலிலும் இப்படி வழங்குவது இல்லை.

ஆதி சங்கரர் இந்த இலை விபூதியை உண்டு காச நோயை நீக்கிக்கொண்டதாகவும், அதனாலேயே அவர் ஸ்ரீசுப்பிரமணிய புஜங்கம் பாடியதாகவும் கூறப்படுகிறது.
இன்றும் இந்த விபூதி இலை தீராத பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்கி வருகிறது. திருசெந்தூர் செல்பவர்கள் இதை தவறரது பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

திருச்செந்தூரில் முருகன் சன்னதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை பக்தர்களுக்குத் தரும்போது, பன்னீர் இலையில் தான் தருவார்கள். முருகன் ஒருபக்கத்திற்கு ஆறு கரங்கள் என 12 கரங்கள் கொண்டவன்.
அது போலவே பன்னீர் மரத்தின் இலைகளிலும் ஒரு பக்கத்திற்கு ஆறு நரம்புகள் என ஈராறு பனிரெண்டு நரம்புகள் இருக்கும். பன்னீருக்கரத்தான் முருகனை சென்று வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது பன்னீருதிருக்கரங்களாலேயே இங்கு விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகமாகும். அதனால் இது பன்னீர் செல்வம் என்று பக்தர்களால் சொல்லப்படுகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு பன்னீ(னி)ரு இலை விபூதி பிரசாதம் காலம் காலமாக வழங்கப்பட்டு வருகிறது.

இலை விபூதியின் மகத்துவம் ;

அபிநபகுப்தர் என்ற சித்தர் ஒருவர் கெடுதல் செய்யும் நோக்கத்தில் ஆதிசங்கரருக்கு செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் செய்தார். இதனால் சூலைநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு ஆதிசங்கரர் உட்பட்டார். மனமுடைந்த ஆதிசங்கரர் இறைவனை நாடி மனமுறுக வேண்டினார். இருந்தும் அவருக்கு நோய் குணமாகவில்லை. அவர் ஒவ்வொரு கோவிலாக சென்று இறுதியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு வந்து மனமுறுக வேண்டினார். அப்போது ஆதிசங்கரர் கையில் பன்னீரு இலை விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதத்தை உடலில் பூசிக், அதை உள்கொண்டார். சில நாட்களில் அவரை தொற்றி இருந்த நோய்கள் அனைத்தும் முற்றிலும் குணமடைந்தது.
அதன் பின்னர் ஆதிசங்கரர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மீது அதிக பற்று கொண்டு மனமுறுகி 32 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகம் பாடினார். அந்த 32 பாடல்களும் கோவிலில் சிறப்பு, சுவாமியின் பெருமை போன்றவை குறித்து இருந்தது. அதில் 25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி பெருமை பட பாடினார்.
சுப்பிரமண்யா! நின் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும். பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும் என்று சுப்பிரம்மண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் செல்லி இருக்கிறார்.
பன்னீர் இலை என்பதற்கு அர்த்தம். இலையில் மொத்தம் 12 நரம்புகள் இருக்கும். முருக பெருமான் தனது 12 கரங்களால் இந்த பிரசாதத்தை வழங்கியதால் இந்த பன்னீர் இலையில் முருக பெருமானின் பன்னிரு கைகள் போன்று இருக்கும். பன்னிரு இலை என்ற பெயர் காலப்போக்கில் மருவி பன்னீர் இலை என்று கூறப்படுகிறது.
முருக பெருமானை பூஜித்த தேவர்கள் அனைவரும் இந்த பன்னீர் மரங்களாக இருப்பதாகவும், அதில் இருந்து இருந்த பெறப்படும் பன்னீர் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுவதால் அதற்கு தனி மகத்துவம் இருப்பதாக கருதப்படுகிறது.
இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக திருச்செந்தூர் கோவிலில் இந்த இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.
இந்த இலையை நேராக வைத்து பார்த்தால் முருக பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும்.
1.பன்னீர் இலையில் உள்ள பூவில் உள்ள சாந்த குண சக்தி நிறைவாக உள்ளது. அது நமது உடலுக்குச் சில நன்மைகளைத் தருகிறது என்று சித்தவைத்தியம் கூறுகிறது.
2.இறைவனுடைய பூஜைக்குறியது துளசி வில்வ இலை, வன்னி இலை. அதே போல் இறைவனுடைய பூஜைக்குரியதாகப் பன்னீர் இலை உள்ளது.
3.பன்னீர் இலையில் உள்ள 12 நரம்புகள் முருகப்பெருமானின் பன்னிரு திருக்கரங்களுச் சமம் என்று கூறுவர். 4.திருவாடுதுறை திருப்பனந்தாள் குரு மகாசந்நிதானங்கள் நடராஜப் பெருமானை வணங்குவோர்க்குப் பன்னீர் இலையில் விபூதிப் பிரசாதம் வழங்கி வருகிறார்கள்.
5.திருநீற்றைப்ப பன்னீர் இலையில் பத்திரமாக வைத்துக் கொள்வது செல்வத்தைச் சேமிப்பது போலாகும் என்று பக்தர்கள பன்னீர் இலை வீபூதியைப் பக்தியுடன் பத்திரமாக வைத்துக் கொள்கிறார்கள்.
6.பக்தர்கள் பன்னீர் இலை விபூதியுடன் இலையையும் உண்டு நோய்களிலிருந்து குணமடைகிறார்கள். அருளாளர் ஆதிசங்கரர் நோய் நீக்கும் உண்மையையும் பெருமையையும் வல்லமையையும் தனது பாடல்களில் எடுத்தியம்புகிறார். 7.பன்னீர் இலை விபூதியைப் பக்தர்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று பூஜை அறைகளில் பத்திரப்படுத்தி வியாதிகள் வந்தால் செந்தில் முருகனை வேண்டி அணிந்து கொள்கிறார்கள். ஆடு, மாடுகள் நோய் கண்டால் நோய் நீங்க வழிபட்டுப் பன்னீர் இலை விபூதியினை மருந்தாகக் கொடுத்து நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு மாடுகளைச் செலுத்திகிறார்கள். பன்னீர் இலை விபூதியினை மருந்தாக் கொடுத்து நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு மாடுகளைச் செலுத்துகிறார்கள். பன்னீர் இலையும் நற்சந்தனமும் பக்தர்களுக்கு வழங்கபபடுகிறது.
"அபஸ்மார குஷ்டக்ஷ்யார்ச ப்ரமேஹ
ஜ்வரோந்மாத குல்மாதிரோகா மஹாந் தஹ
பிசாசஸ்ச சர்வே பவத் பத்ரபூதிம்
விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே"
பொருள்
"தாரகாசுரனை வதம் செய்தவனே! வலிப்பு, காசம், குஷ்டம், சுரம், மேகவெட்டை, குடல்புண், புற்றுநோய், பிசாசு மற்றும் மனப்பயம் எனும் நோய்களனைத்தும் பன்னீர் இலையில் வைத்துத் தரப்படும் உன் திருநீற்றைப் பார்த்த மாத்திரத்தில் பறந்தோடி மறைந்துவிடும்."
ஆதி சங்கரர், திருச்செந்தூரில் பாடிய சுப்ரமண்ய புஜங்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். பார்த்த மாத்திரத்திலேயே நோய்களைப் பறக்கடிக்கும் என்று அவர் குறிப்பிடும் 'பத்ர பூதி' என்பது என்ன?
விபூதியின் வரலாறு
'பத்ர' என்பது இலை. பூதி என்பது நீறு. செந்திலாண்டவன் திருக்கோயிலில் இறைவனது பிரசாதமாகிய திருநீறு, பன்னீர் இலையில் வைத்துத் தரப்படுகிறது. இதன் மணமே தனித்தன்மை உடையதாக இருக்கும்.
இலையினால் விபூதியின் மணம் இன்னும் அதிகரிக்கிறதோ என்று கூடத் தோன்றுகிறது. என்னவானாலும் சரி, இலை விபூதியில் செந்திலாண்டவனின் அருள் மணம் வீசுகிறது என்பதுதான் நிஜம்.
இலை விபூதியின் வரலாறு, என்னவென்று பார்ப்போம். செந்தூரில் சூரபத்மாதியர்களை ஒடுக்கிவிட்டு கடற்கரையில் கலங்கரை விளக்கம் போன்று ஒளி வீசி நின்றான் முருகப் பெருமான். அவனது பெருமையைத் துதித்த வேதங்களனைத்தும் ஒன்று சேர்ந்து செந்திலோனின் மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக இவ்விடத்தில் தோன்றின.
எனவே இவற்றின் இலைகளும் வேத மந்திர சக்தியை உடையவை என்கிறது புராணம். பன்னீர் இலையில் பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் வேத மந்திர சக்திகள் நிறைந்து விடுகின்றன.தவிர, பன்னீர் இலையில் காணப்படும் 12 நரம்புகள் முருகனது பன்னிரு கரங்களை நினைவூட்டுவனவாக அமைந்துள்ளன.
தாடகை எனும் பெண்ணை ராமபிரான் மூலமாக வதம் செய்த காரணத்தினால் தனக்கு ஏற்பட்ட குன்மம் முதலான நோய்கள் தீர, ராமபிரான் தன் கனவில் கூறியபடி, செந்திலாண்டவன் இலை விபூதியைத் தரித்துக் கொண்டு நோய்கள் நீங்கப் பெற்றார் விசுவாமித்திர மகரிஷி.
ஆதி சங்கரரும் செந்திலாண்டவனின் நீறும்
ஆதி சங்கரரது வாழ்விலும் இலை விபூதி மகிமையை விளக்குவதான ஒரு சம்பவம் ஏற்பட்டது. அவருடன் ஏற்பட்ட வாதங்களில் தோற்ற அபிநவகுப்தர் என்பவர், ஆபிசார வேள்வி செய்து சங்கரருக்கு உடலை வருத்தும் நோய் உண்டாகச் செய்து விட்டார்.
அக்காலத்தில் அவர் வட கர்நாடகாவிலுள்ள கோகர்ணத் திருத்தலத்தில் தங்கி வழிபாடு செய்து வந்தார். ஒரு நாள் இரவு, இறைவன் அவர் கனவில் தோன்றி, "என் குமாரன் ஷண்முகன் குடியிருக்கும் புண்ணியத் தலமான செயந்திபுரம் எனும் திருச்செந்தூர் சென்று அவனைத் தரிசித்தால் உன் நோய் முற்றிலுமாக நீங்கப் பெறுவாய்" என்று கூறினார். உறங்கி எழுந்து பார்த்த சங்கரரின் அருகில் விபூதி இருந்தது.
கோகர்ணேஸ்வரர் ஆணைப்படி, செந்தூர் வந்தடைந்தார், ஆதிசங்கரர். கடலில் நீராடி, பின் இறைவன் சன்னதியில் மனமுருகி நின்றபோது, ஆதிசேஷனாகிய பாம்பு ஊர்ந்து ஊர்ந்து இறைவன் சன்னதியை அடைந்ததைக் கண்டார். அதே நேரம் அவருக்கும் இறை தரிசனம் கிட்டியது.
அவன் அருளாலே, மடை திறந்த வெள்ளம் போல அவர் திருவாயிலிருந்து சுலோகங்கள் வெளிவந்தன. வடமொழியில் பாம்பைப் புஜங்கம் என்பர். வடமொழி இலக்கணப்படி, புஜங்க விருத்தமாக அமைந்தன பாடல்கள். பாடி முடித்து இலை விபூதியைப் பெற்று அணிந்து கொண்ட சங்கரருக்கு வெகு விரைவில் நோய் குணமாயிற்று.
தெய்வ அவதாரமாகக் கருதப்படும் ஆதிசங்கரர் நினைத்திருந்தால், தானே நோயை விரட்டி இருக்க முடியும்.ஆனால் மானுட அவதாரத்தில், அத்துயரை, தானே அனுபவித்து உலகோருக்குப் பத்ர பூதியின் பெருமையை வெளிப்படுத்த அவர் நிகழ்த்திய திருவிளையாடலே இது என்று கூறலாம்.
விபூதியே கூலி
சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ தேசிகமூர்த்தி தம்பிரானவர்கள் செந்தூர் மேலக் கோபுரத்தை நிர்மாணித்தார். பொருள் பற்றாக் குறை ஏற்படவே, கூலியாட்களுக்குக் கூலிக்குப் பதிலாக இலை விபூதியைக் கொடுத்து, தூண்டுகை விநாயகர் கோயிலைத் தாண்டிச் சென்றபின் திறந்து பார்க்கும்படிக் கூறினாராம். அதன்படி திறந்து பார்த்தபோது, தத்தம் வேலைக்குரிய கூலி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து மெய் சிலிர்த்தனர் என்கிறது கோயில் வரலாறு.
திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பாடிய பகழிக் கூத்தர் வாழ்விலும் இலை விபூதி பெரும் அற்புதத்தை நிகழ்த்தியது. தீராத வயிற்று வலியால் துடித்த அவரது கனவில் கோயிலில் பூஜை செய்யும் உரிமையுடைய திரிசுதந்திரர் போல ஒருவர் தோன்றினார்.
"என் புகழைப் பிள்ளைத் தமிழால் பாடு, உன் நோய் குணமாகும்" என்று கூறி இலை விபூதியைக் கையில் கொடுத்திட்டு மறைந்தாராம். உரையாசிரியர் குகஸ்ரீ ரசபதி அவர்கள், திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் உரையில் இதுபற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
கந்தர் கலி வெண்பா பாடிய குமரகுருபரரின் சரித்திரத்தை எழுதியருளிய வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள், செந்தூர் ஆலயத்தில் அர்ச்சகர்கள் இலை விபூதிப் பிரசாதத்தை எடுத்து வழங்குவதைக் குமரகுருபரர், தான் கண்டபடி அழகாகப் பாடியுள்ளார்.
"இலையமில் குமரவேள் முன் வணங்குவார்க்கு என்றும் துன்பம்
இலை.அடுபகை சற்றேனும் இலை.படுபிணி நிரப்பும்
இலை,அளற்றுழன்று வீழ்தல் இலை,பல பவத்துச் சார்பும்
இலை என இலை விபூதி எடுத்தெடுத்துதவல் கண்டார்"
என்று பாடுகிறார்.
விபூதியின் மகிமையைப் பாடவந்த அருணகிரிநாதரும்,
"ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடியார்கள்
பதமே துணையதென்று..."
என்று பாடுகிறார். நாமும் "ஆறுமுகம்" என்று ஆறு முறை ஓதி இலை விபூதியைத் தரித்து செந்திலாண்டவன் திருவருளுக்குப் பாத்திரமாவோமாக.

சித்தர் மந்திர தியானம்

சித்தர் ஜீவ சமாதியும் பிரச்சனை தீர வழிபிறப்பும் :-
மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலருக்கும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள். அவர்கள் அவர்கள் தன் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சனை தீர வழிபிறக்கும். ஒரு முறையாவது உங்கள் சித்தர் ஜீவ சமாதி நேரில் சென்று ஜென்ம நட்சத்திரத்திலோ, திதியிலோ சென்று தரிசித்துவிட்டு பின்பு வீட்டிலேயே மறுமுறையில் அந்த குறிப்பிட்ட நாளில் மாதாமாதம் உபவாசம் இருந்து வணங்கிவந்தால் பல மாறுதலான வாழ்வு தங்களுக்கு அமையும்.

வெகு தொலைவில் சில ஜீவ சமாதிகள் அமைந்துள்ளதால் அங்கு சென்றுவர இயலாதவர்கள் வீட்டிலேயே ஒரு வெள்ளை விரிப்பின்மீது அமர்ந்து உங்கள் சித்தரின் பெயரை உச்சரித்து முடிந்தால் அவரின் மந்திரங்களைக்கூறி தியானம் செய்யுங்கள். நல்லதே நடக்கும்.

மேலும் அறிக : திதியில் பிறந்தவர்களே அனைவரும் எனவே திதி இல்லாமல் விதி அமையாது. உங்கள் நட்சத்திர நாளை பார்த்து பூஜிக்க முடியாவிட்டாலும் உங்கள் திதி நாளில் பூஜிக்கலாம். அதுவும் முடியாவிட்டால் அமாவாசை பௌர்ணமி திதிகளில் வழிபாடு செய்யலாம். சில சித்தர்களின் ஜீவ சமாதி எங்குள்ளது என்று தெரியாமலேயே இருக்கிறது. சிலர் அங்குள்ளது இங்குள்ளது எனவும் தன் ஊரை வளர வைக்க எத்தனித்து இங்குதான் சமாதி உள்ளது. ஓலைச்சுவடி ஆதாரம் உள்ளது என ஒரு கதையையும் உருவாக்கிய சம்பவம் நிறைய உள்ளது. எது எப்படியோ நம்பிக்கையே தெய்வம். அந்த நம்பிக்கையோடு இருக்கும் இடத்தை நாடிச்சென்று வழிபாடு செய்யுங்கள்.

சித்தர்கள் எந்த திதியில் பிறந்தார்கள் என்பதை வரலாறு சரியாக அனைவருக்கும் குறிப்பிடவில்லை. ஆனால் நட்சத்திரங்களையும் பிறந்த தமிழ் மாதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். கீழே எந்தெந்த நட்சத்திரத்தில் சித்தர்கள் பிறந்தார்கள் அவர்கள் ஜீவ சமாதி எங்குள்ளது. அவர்களுக்கான மந்திரம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்தி வளம் காணுங்கள்.

அசுவினி நட்சத்திர சித்தர் பெயர் காளங்கிநாதர் ஆவார். இவர் சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது. அவரவருக்குபெயரே மந்திரம். எனவே சித்தர்களின் பெயரை மரியாதையாக உச்சரித்தலே போதும். ஓம் குருவே சரணம் என மூன்றுமுறை கூறி ஓம் ஸ்ரீ காளங்கி நாதர் சித்த குருசுவாமியே சரணம் சரணம் என முடிந்தளவு மனம் விரும்பும் வரை கூறலாம். மற்ற நட்சத்திரக்காரருக்கும் இதே முறையில் தான் மந்திரம் கூற வேண்டும். காளங்கிநாதர் என்ற பெயரை நீக்கி உங்கள் சித்தர் பெயரை சேர்த்துக்கொள்ளவும்.அடுத்து

பரணி நட்சத்திரம் சித்தர் போகர் ஆவார். இவர் பழனி முருகன் சன்னதியில் சமாதி உள்ளது. அடுத்து

கிருத்திகை நட்சத்திரம் ரோமரிஷி சித்தர்ஆவார். இவருக்கு சமாதியும் இல்லை. இவர் உடல் அழியவும் இல்லை. நேரே கைலாயத்திற்கு சென்றுவிட்டார் என வரலாறு கூறுகிறது. இவரை திங்கள்கிழமை வெள்ளை ஆடை அணிந்து வடக்கு நோக்கி திருக்கயிலை இருப்பதாக பாவித்து வணங்கவும்.அடுத்து

ரோகிணி நட்சத்திரம் சித்தர் மச்சமுனி ஆவார். இவர் ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது. அடுத்து

மிருகசீரிடம் நட்சத்திரம் சித்தர் பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி சங்கரன் கோயில் என்ற ஊரில் உள்ளது. இன்னொருவர் சட்டமுனி சித்தராவார். ஊர் திருவரங்கம் ஆகும். சில நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் இரண்டு சித்தர் வருவர். அடுத்து

திருவாதிரை நட்சத்திரம் சித்தர் இடைக்காடார் ஜீவ சமாதி திருவண்ணாமலை. அடுத்து

புனர்பூச நட்சத்திரம் சித்தர் தன்வந்தரி ஆவார். இவர் வைதீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர். அடுத்து

பூசம் நட்சத்திரம் கமல முனி சித்தர் ஆவார். இவர் திருவாரூர் என்ற ஊரில் ஜீவ சமாதி உள்ளது.அடுத்து

ஆயில்யம் நட்சத்திரம் இதற்கான சித்தர் அகத்தியர். இவர் ஒளிவட்டம் குற்றால பொதிகைமலையில் உள்ளது. சமாதி கேரள தலைநகரம் திருவனந்தபுரம் இங்கு உள்ளது. அடுத்து

மகம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார். இவர் ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது. பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி சிவாலயமாகவே இருக்கும். அடுத்து

பூரம் நட்சத்திரம் இவர் சக்தியின் அருளைப் பெற்ற நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் அவதரித்த தெய்வ பெண்மணி ஸ்ரீ ஆண்டாள் ஆவார். இவர் பூமாதேவி அம்சமாக உள்ளார். இவரை வணங்க ஏற்ற இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமே.ஏனெனில் இவர் தோன்றிய இடமே அங்குதான். அடுத்து ராமதேவ சித்தரும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான். இவர் மாற்று பெயர் யாகோப்பு என்றும் உள்ளது. இவர் ஜீவசமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளி வந்துபோகும் இடம் அழகர் மலையாகும். இவரை வழிபட நம் நாட்டினர் அழகர் மலைக்குத்தான் செல்கிறார்கள்.அடுத்து

உத்திரம் நட்சத்திரம் இதில் அவதரித்த சித்தர் காகபுஜண்டர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் திருச்சி உறையூரில் உள்ளது. அடுத்து

அஸ்தம் நட்சத்திரம் சித்தர் கருவூரார் ஆவார். இவர் சமாதி கரூரில் உள்ளது. அடுத்து இவர் ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோயில் ஆகும். அடுத்து

சித்திரை நட்சத்திரம் இதற்கான சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். நண்ணா சேர் என்ற இடத்தில் இவர் ஜீவ சமாதி உள்ளது.அடுத்து

சுவாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் புலிப்பாணி ஆவார். சமாதி பழனி அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது. அடுத்து

விசாகம் நட்சத்திரம் இதற்கான சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவார். நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி உள்ளது. அடுத்து

அனுஷம் நட்சத்திரம் சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று அழைக்கப்படுபவராவார். இவர் எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.
அடுத்து

கேட்டை நட்சத்திரம் இதற்கான சித்தர் பகவான் வியாசர் ஆவார். இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார். அடுத்து

மூலம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் சமாதி ராமேஷ்வரத்தில் உள்ளது. அடுத்து

பூராடம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பூரம் நட்சத்திரத்திற்கு சொல்லப்பட்ட ராமதேவர் எனும் யாகோப்பு சித்தரே ஆவார். அழகர்மலை மற்றும் மெக்காவில் ஜீவ ஒளி உள்ளது.
அடுத்து

உத்திராடம் நட்சத்திரம் இதற்கான சித்தபிரான் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதி ஆகும். அடுத்து

திருவோணம் நட்சத்திரம் இதற்கான சித்தர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார். இவர் சமாதி பாண்டிச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது. அடுத்து

அவிட்டம் நட்சத்திரம் இதற்கான சித்தர் திருமூலர் ஆவார். இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி உள்ளது. அடுத்து

சதயம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கௌபாலர் ஆவார். இவரின் சமாதி இங்குதான் என வரலாறு தெளிவாக குறிக்கவில்லை. எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார் எனக் குறிப்பு உள்ளது.அடுத்து

பூராட்டாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சோதிமுனி ஆவார். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார். தனித்து சமாதி என்று குறிப்பிடும்படியாக தெரிவிக்கவில்லை. அடுத்து

உத்திரட்டாதி நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டதென வரலாறு கூறுகிறது. இவரை சிவாலயத்தில் ஒலிக்கும் இசை வாத்தியங்களில் ஏழாம் ஓசையில் ஒலியாக வந்து இறைவனுக்கு இசை முழக்கத்தால் சேவை செய்வார் எனக் குறிப்பிடுகிறார்கள். இவரை வீட்டிலேயே சிறுமணி ஓசையில் வரவழைத்து அவர் அங்கு வந்ததாக பாவித்து வணங்கலாம். அடுத்து

ரேவதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சுந்தரானந்தர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் மதுரையில் உள்ளது, அறிக.

மனத்தூய்மையும், உடல் தூய்மையும், கர்ம தூய்மையும் (பாவமற்ற கர்மாவைத் தொடர்தல்) தனிஅறையும் கொண்டு, ஒற்றை தீபம் மற்றும் ஏற்றி மன ஒருநிலைப்பாட்டோடு உங்கள் சித்தரை வணங்கி வாருங்கள். நிச்சயம் அவர்கள் அருளை தர தவறமாட்டார்கள். உங்களிடம் உள்ள பாவ கர்மாவிற்கு தயங்கி தெய்வம் துணைக்கு எளிதில் வரமாட்டார்கள். ஆனால் சித்தர்கள் அவ்வாறில்லை. தன்னை அழைத்தவர்களுக்கு எதாவது ஒரு வழியில் வழிகாட்ட தயங்கமாட்டார்கள். எனவே ஒரு தினத்தில் சில நிமிடங்களையாவது சித்தர் வழிபாட்டிற்கு செலவிடுங்கள். சித்தர் பூஜை செய்பவர்கள் நீத்தாருக்கு திதி பார்த்து தெவசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தது சித்த தியானத்திற்கு அரைமணி நேரமாவது ஒரு நிலையில் அமர வேண்டும். இந்த வழிமுறையை கடைபிடித்து உங்கள் கஷ்டத்தையும், வறுமையையும் போக்கிக்கொள்ளுங்கள்.
[9:20am, 25/09/2015] இரா.பூபாலன்..🙊: 18 சித்தர்கள் பற்றிய குறிப்பு - வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்

18 சித்தர்கள் பற்றிய குறிப்பு

1.அகத்தியர்
பெயர்: அகத்தியர்
பிறந்த தமிழ் மாதம்: மார்கழி
தமிழ் பிறந்த நட்சத்திரம்:ஆயில்யம்
ஆயுள் கால அளவு: 4-யுகம் , 48 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம்: திருவனந்தபுரம்

2.பதஞ்சலி
பெயர்: பதஞ்சலி
பிறந்த தமிழ் மாதம்: பங்குனி
தமிழ் பிறந்த நட்சத்திரம்:மூலம்
ஆயுள் கால அளவு: 5-யுகம் 7 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம் இராமேஸ்வரம்

3.கமலமுனி
பெயர்:கமலமுனி
பிறந்த தமிழ் மாதம்: வைகாசி
தமிழ் பிறந்த நட்சத்திரம்: பூசம்
ஆயுள் காலம்: 4000 ஆண்டுகள், 48 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம்: திருவாரூர்

4.திருமூலர்
பெயர்: திருமூலர்
பிறந்த தமிழ் மாதம்: புரட்டாசி
தமிழ் பிறந்த நட்சத்திரம்: அவிட்டம்
ஆயுள் காலம்: 3000 ஆண்டுகள், 13 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம்: சிதம்பரம்

5.குதம்பிசித்தர்
பெயர்: குதம்பிசித்தர்
பிறந்த தமிழ் மாதம்: ஆடி
தமிழ் பிறந்த நட்சத்திரம்: விசாகம்
ஆயுள் காலம்: 1800 ஆண்டுகள், 16 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம் :மாயவரம்

6.கோரக்கர்
பெயர்: கோரக்கர்
பிறந்த தமிழ் மாதம்: கார்த்திகை
தமிழ் பிறந்த நட்சத்திரம்: ஆயில்யம்
ஆயுள் கால அளவு: 880 ஆண்டுகள், 11 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம்:பேரூர்

7.தன்வந்திரி
பெயர்: தன்வந்திரி
பிறந்த தமிழ் மாதம்: ஐப்பசி
தமிழ் பிறந்த நட்சத்திரம்:புனர்பூசம்
ஆயுள் கால அளவு: 800 ஆண்டுகள், 32 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம்: வைதீஸ்வரன் கோயில்

8.சுந்தரனார்
பெயர்: சுந்தரனார்
பிறந்த தமிழ் மாதம்: ஆவணி
தமிழ் பிறந்த நட்சத்திரம்:ரேவதி
ஆயுள் கால அளவு: 800 ஆண்டுகள், 28 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம்: மதுரை

9.கொங்கணர்
பெயர்: கொங்கணர்
பிறந்த தமிழ் மாதம்: சித்திரை
தமிழ் பிறந்த நட்சத்திரம்: உத்திராடம்
ஆயுள் கால அளவு: 800 ஆண்டுகள், 16 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம்: திருப்பதி

10.சட்டைநாதர் சட்டைமுனி
பெயர்: சட்டைநாதர்
பிறந்த தமிழ் மாதம்: ஆவணி
தமிழ் பிறந்த நட்சத்திரம்: மிருகசீரிஷம்
ஆயுள் கால அளவு: 800 ஆண்டுகள், 14 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம்: திருவரங்கம்

11.வான்மீகர் / வால்மீகி
பெயர்: வான்மீகர் / வால்மீகி
பிறந்த தமிழ் மாதம்: புரட்டாசி
தமிழ் பிறந்த நட்சத்திரம்: அனுஷம்
ஆயுள் கால அளவு: 700 ஆண்டுகள், 32 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம்: எட்டுகுடி

12.ராமதேவர்
பெயர்: ராமதேவர்
பிறந்த தமிழ் மாதம்: மாசி
தமிழ் பிறந்த நட்சத்திரம்: பூரம்
ஆயுள் கால அளவு: 700 ஆண்டுகள், 06 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம் :அழகர்மலை

13.நந்தீஸ்வரர்
பெயர்: நந்தீஸ்வரர்
பிறந்த தமிழ் மாதம்: வைகாசி
தமிழ் பிறந்த நட்சத்திரம்: விசாகம்
ஆயுள் கால அளவு: 700 ஆண்டுகள் 03 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம்: காசி

14.இடைக்காடர்
பெயர்: இடைக்காடர்
பிறந்த தமிழ் மாதம்: புரட்டாசி
தமிழ் பிறந்த நட்சத்திரம்: திருவாதிரை
ஆயுள் கால அளவு: 600 ஆண்டுகள், 18 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம்: திருவண்ணாமலை

15.மச்சமுனி
பெயர்: மச்சமுனி
பிறந்த தமிழ் மாதம்: ஆடி
தமிழ் பிறந்த நட்சத்திரம்: ரோஹிணி
ஆயுள் கால அளவு: 300 ஆண்டுகள், 62 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம்: திருப்பரங்குன்றம்

16.போகர்
பெயர்:போகர்
பிறந்த தமிழ் மாதம்: வைகாசி
தமிழ் பிறந்த நட்சத்திரம்: பரணி
ஆயுள் கால அளவு: 300 ஆண்டுகள், 18 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம்: பழனி

17.கருவூரர்
பெயர்:கருவூரர்
பிறந்த தமிழ் மாதம்:சித்திரை
தமிழ் பிறந்த நட்சத்திரம்: ஹஸ்தம்
ஆயுள் கால அளவு: 300 ஆண்டுகள், 42 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம்: கருவூர்

18.பாம்பாட்டிசித்தர்
பெயர்: பாம்பாட்டிசித்தர்
பிறந்த தமிழ் மாதம்: கார்த்திகை
தமிழ் பிறந்த நட்சத்திரம்: மிருகசீரிஷம்
ஆயுள் கால அளவு: 123 ஆண்டுகள், 14 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம்: சங்கரன்கோயில்.

Tuesday, 17 May 2016

நல்லவை நான்கு 01

 உங்கள் வீட்டு பணப்பெட்டியில் மல்லிகைபூ ஏலக்காய் பச்சைகற்பூரம் சந்தனம் வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமை களில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பணவரவு ஏற்படும் ..
 உங்களின் வீட்டு படுக்கை அறையில் கண்ணாடி இருக்கக்கூடது , மூன்றாம் மனிதனின் குறுக்கீடு இருக்கும் ,அல்லது குழந்தை வாய்பேசாமல்
போகவும் வாய்ப்புவுண்டு .அப்படி இருந்தால் இரவில் மூடி வைத்து விடுங்கள்
 சிறிது கல் உப்பை ஒருகின்னத்தில் போட்டு ,கழிவறையில் வைத்தால் கெட்டசக்திகளை இழுத்து கொள்ளும் ஆனால் அடிக்கடி உப்பை மாற்ற வேண்டும் .
 வீட்டு வாயிற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது.இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து ஏற்படுத்தும்.தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டின் வாசற்கதவில் மஞ்சளால் ஸ்வஸ்திக் வரையலாம்.இது பாதிப்பை பெருமளவில் குறைக்கும்
 கோவில் கொடி, கொடிமரம், கோவில் கோபுரம் இவற்றின் நிழல் வீட்டின் மேல் படியக்கூடாது. தாந்த்ரீக நூல்கள் இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் கஷ்டப்படுவார்கள். இது ப்ருத்வி தோஷங்களில் ஒன்று.

இதற்குப் பரிகாரம்:-
வீட்டில் வடக்கிருந்து தெற்கு நோக்கிய படி பைரவர் படம் வைத்து தினமும் வெல்லம், கற்கண்டு அல்லது இனிப்புகள் படைத்து வணங்கி வர 12 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்புகள்  நீங்கி நலம் ஏற்படும். மேற்கண்ட பாதிப்பு
உள்ளவர்கள் பைரவ மந்திரம் அல்லது பைரவ காயத்ரி ஜெபித்து விபூதி அணிந்து வர நன்று

 சுடுகாட்டுக்கு சமீபத்தில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதைப் பார்க்கக்கூடாது.இது அக்னி தோஷத்தை உண்டாக்கும்.

 முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.
 புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.
 வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும் தொற்று நோய் வந்து அவதிப்பட்டால்-சிறிய மண் சட்டியில் மஞ்சள் லட்டு,ஒரு முட்டை, 2 நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம் வைத்து நோய்வாய்பட்டவரின் தலையை 3 முறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள் சேரும் இடத்தில் மதியம் 12 மணிக்கு எறிந்து விட, நோய் விலகும்.
 கடன்களால் வெகு காலம் துன்பப்படும் நபர்களுக்கு : ஒன்னேகால் அடி வெள்ளை துணியை எடுத்து அதில் நான்கு பக்கங்களிலும் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி, பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து அதை 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் விட, கடன்கள் அடியோடு அழியும்.
 வியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல : ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும். மறு நாள் திறந்தவுடன், அனைத்தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும். எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து போய், வியாபாரம் செழிக்கும்.
 வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும் புதிய தொழில், முயற்சி தொடங்குமுன், சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து மூன்று
 தலையை வலது புறமாக சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர் மேல் தூவி விட வேண்டும்.
அவர் சென்றதும் அவற்றை கூட்டி வெளியில் பறவைகளுக்கு கொட்டி விடலாம். இது செயலில் வெற்றியை தேடித்தரும்.

 அரச மரத்தை சனிக்கிழமை காலை 8 மணிக்குள் 108 முறை வலம் வந்து பின்பு தூப,தீபம்-நிவேதனம் செய்து வழிபட்டால் பண புழக்கம் அதிகரிக்கும். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வரலாம்.
 செவ்வாயின் பாகமான தெற்கில் 7 நல்லெண்ணை விளக்கு (மண்) வைத்து தூபம் காட்டி வேண்டி வர, வருடக்கணக்கில் வராத கடன்களும் வந்து சேரும். ஏமாற்றப்பட்ட பொருட்களும் திரும்ப சேரும்.வீட்டிலேயே செய்யலாம்.
 7 பற்கள் மட்டுமே உள்ள வெள்ளை பூண்டு வாங்கி வந்து அதுதான் 7 காய்ந்த மிளகாகளையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி வீடு,கடை,ஆபீஸ் வாசல்களில் தொங்க விட திருஷ்டிகள் சகலமும் விலகி நன்மை சேரும்.
 வீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது அருகம் புல் நுனி ஒன்று பறித்து எடுத்து பாக்கெட்டில் வைத்து செல்ல செல்லும் காரியம் வெற்றி அடையும்.
 ஆரஞ்சு மரத்தில் வேரை பாக்கெட்டில் வைத்து செல்ல எதிரிகளும் வசியமாவார்கள்.
 படிக்கும் பிள்ளைகள் இடது கையை டேபிள் மீது வைத்து படிக்க,எழுத தொடங்கினால் படித்த பாடங்கள் நினைவில் நிற்கும்.
தேர்வெழுதும் போதும் இதை செய்யலாம்.
 வீட்டில் வாடிய செடிகள் இருந்தால் நல்லதல்ல.வீட்டின் முன்பகுதியில் வாடிய செடிகள் இருந்தால் அது செல்வவரவை,வசீகர சக்தியைப் பாதிக்கும்.
வீட்டின் பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அது பேய்,பிசாசு போன்ற துர்ச்சக்திகளை ஈர்க்கும்.இது பூமி தோஷத்தை உண்டாக்கும்.எனவே இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் உள்ள வாடிய செடிகளை ஒரு செவ்வாய்க்கிழமை அன்று வேரடி மண்ணுடன் பிடுங்கி ஓடும் நீரில் அல்லது கடலில் விட்டு விட மேற்சொன்ன பாதிப்புகள.

சுடுகாட்டுக்கு சமீபத்தில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதைப் பார்க்கக்கூடாது.இது அக்னி தோஷத்தை உண்டாக்கும். இதனால் வீட்டில் உள்ள சுப தெய்வங்களை வெளியேறும். முகத்தில் தேஜஸ், கவர்ச்சி குறைந்து
நம்மைப் பார்ப்பவர்களிடம் வெறுப்பை உண்டுபண்ணும். வறுமை, அவமானம் உண்டாக்கும். பேய், பிசாசுகள் நம்மைப் பீடிக்க நாமே வழியமைத்துத் தருவதாக அமைந்து விடும்.

இதற்குப் பரிகாரம்:-
ஒரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மறு ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் சூரியனுக்கு அல்லது துளசிச் செடிக்கு 3 கை ஜலம் தர்ப்பணம் செய்ய வேண்டும். மேலும் சூரியனையும், அக்னி தேவரையும் பிரேத தோஷம் நீங்க வேண்டிக் கொண்டு பின் வலது உள்ளங்கையில் நீர் வைத்துக்கொண்டு “ஓம் ரம் அக்னி தேவாய சர்வ தோஷம் நிவாரய நிவாரய” என 3 தடவை ஜெபித்து அந்த நீரைத் தலையில் தெளித்துக் கொள்ளவும்

 கோதுமை மாவினால் சிறு சிறு உருண்டைகளாக 7 அல்லது 14 அல்லது 7ன் மடங்குகளில் உருண்டை செய்துகொள்ளவும்.குங்குமத்தில் கொஞ்சம் நீர் விட்டு அதை வெள்ளிக்குச்சி அல்லது மாதுளைமரக் குச்சியால் தொட்டுக் கோதுமை உருண்டையில் ஸ்ரீம் என்று எழுதி அதைக் குளம்,ஆறு அல்லது கோவில் தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்குப் போடவும்.எழுதிய பின்னர்ஸ்ரீம் என்பது அழிந்து விட்டாலும் பரவாயில்லை. இவ்வாறு வெள்ளிக்கிழமை அல்லது
ஞாயிற்றுக்கிழமைகளில் செய்து வர லக்ஷ்மியின் அருள் உண்டாகி பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் சேரத் தொடங்கும்.

சிறு வயது முதல் நாம் செய்கிற சிறு சிறு தவறுகள், ஒன்றாய் சேர்ந்துதான் ,பிற்காலத்தில் அதிக தோஷத்தை ஏற்படுத்தி ,காரியத்தை தடை செய்கிறது.  அவைகள் எது என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.

குளிக்காமலே காலை சாப்பிடுவது.நின்றுகொண்டு சிறுநீர் கழிப்பது .சாமிக்கு தினமும் நமஸ்காரம் செய்யாமல் வீட்டை விட்டு வெளியில் கிளம்புவது.

காலைவேளையிலே சாப்பிடாமலே செல்வது.தினமும் நகத்தை கடிப்பது.  இரு கைகளாலும் தலையை எப்போதுபாத்தாலும் சொரிக்கு ஹிதமாக சொரிந்துகொள்வது .

அம்மா அப்பாவிற்கு தினமும் நமஸ்காரம் செய்யாமல் இருப்பது .

பள்ளி ஆசிரியர்களை கேலி செய்வது .அனைவரையும் மரியாதை இல்லாமல் அழைப்பது .வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரியை, குழந்தைகள், வாடி போடி என்று கூப்பிடுவது .இதை பார்த்துக்கொண்டு பெற்றோர்கள், அந்த குழந்தை பேசுவதை ரசிப்பது .

வெளியில் இருந்து வீட்டுக்கு எத்தனை தடவை வந்தாலும் காலை அலம்பாமல் அப்படியே இருப்பது.

மாதவிடாய் காலத்தில் அந்த சட்டத்தை மதிக்காமல் தன் இஷ்டத்துக்கு இருப்பது

வெறும் தரையில் படுத்து தூங்குவது.  மதியம் தூங்குவது .

மாலை நேரத்தில் வீட்டில் விளக்கு ஏத்தாமல் இருப்பது

மாலை விளக்கு வைத்தவுடன்., தலை வாருவது,

இரவு அதிக நேரம் கண் விழித்துக்கொண்டு இருப்பது.  அதிகாலை தூங்கிக்கொண்டு இருப்பது

யாரையும் தூக்கி எரிந்து பேசுவது .  எப்போது பாத்தாலும் வீட்டு வாசலை மூடியே வைப்பது

பசு மாடு, காளை மாடு இவைகளை அது சும்மா இருக்கும்போது, நாம் அதை அடிப்பது .வேடிக்கை பார்ப்பது .

காக்கைக்கு சாதம் வைக்காமல் இருப்பது. நாய்க்கு சாதம் போட்டு, அது சாப்பிடுவதை பார்ப்பது.

வருடா வருடம், முன்னோர்களின் திதியை நமது வீட்டில் செய்யாமல் இருப்பது .  கணவனை எதுத்துப்பேசுவது.  மனைவியை அடிப்பது. .குழந்தைகளை சரியாக வளர்க்காமல் இருப்பது

சிறு வயதிலேயே பக்தியை சொல்லிக்கொடுக்காமல், பணம் ஒன்றையே சொல்லிகொடுப்பது .

யாராக இருந்தாலும் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க தவறுவது.

சில இடத்தில் பணம் காசுகளை ஏமாத்துவது. பாக்கி வைத்து மறப்பது.

இஷ்டத்துக்கு கடவுளுக்கு வேண்டிக்கொள்வது. பிறகு அதை செய்யாமல் மறந்துபோவது

புண்ணிய நதிகளில் குளிக்காமல் இருப்பது. கோயிலுக்கு போகாமலேயே இருப்பது.

போனாலும், பேசிக்கொண்டே, செல்வது.அங்கு சாப்பிடுவது.தொன தொன என்று அடுத்தவர்களுக்கு வேண்டிகொள்ள முடியாமல் நீங்கள் பேசிக்கொண்டே இருப்பது.

வீட்டில் மந்திரங்களை சொல்லாமல், என்னமோ தனக்குத்தான் தெரியும் என்று நினைத்து, கோயிலில் சென்று கத்தி கத்தி சொல்வது

வீட்டு வாசல்படியிலேயே அமர்வது.வீட்டில் துணிகளை அன்றாடம் துவைக்காமல், அப்படியே ஒரு மூலையில் போட்டு வைப்பது .

வருடத்துக்கு ஒரு தடவையாவது குலதெய்வம் கோயில் போகாமல் இருப்பது. வீட்டில் பூஜைகள் செய்யாமல் இருப்பது.

நம் பசிக்கு அடுத்த உயிரை கொன்று அதை புசிப்பது

ஊட்டி கொடைக்கானல் சிம்லா டார்ஜிலிங் செல்ல காசு இருக்கிறது. ஆனால் காசி கயா போகாமல் இருப்பது

அனாவசியமாக, நாம் நம் நண்பர்களிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது, நம் கைகள், மரத்தை , உளியால் வேண்டும் என்றே, கொத்தி கொத்தி பேசுவது , மரத்தை, அதுவும் வளரும் மரத்தை அனாவசியமாக, நம் கையில் இருக்கும் அரிவாள் இவைகளால், அதை வெட்டி வெட்டி பழுதுபடுத்தக்கூடாது .அந்த மரம் நம்மை என்ன செய்தது

இப்படி முடிவே இல்லாமல் இன்னும் நிறைய இருக்கிறது.

என்ன ஆச்சரியம் என்றால், இவை அத்தனையிலும் இன்று நாம் நலமாகவே இருக்கிறோம் என்று உணராமல், இன்னும் காரியம் எனக்கு நடக்கவில்லை என்று புலம்புவதுதான்.

தற்போது முகப்பரு பிரச்சனையானது அளவுக்கு அதிகமாக உள்ளது*

இந்த பிரச்சனையை சரிசெய்ய எத்தனையோ வழிகள் உள்ளன.

அதில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் முறை கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவது தான். அவற்றால் பெரும்பாலும் முகப்பருக்கள் போவதை விட, அதனால் பருக்கள் வந்தது தான் அதிகம்.


சிலருக்கு அந்த பருக்களால் வடுக்கள் கூட வந்துவிடுகின்றன. அதனால் பலருக்கு அந்த வடுவானது, நீண்ட நாட்கள் போகாமல் கருமையாக இருக்கின்றன. எனவே இத்தகைய நிலை ஏற்படாமல் இருப்பதற்கு, ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்வதற்கான இயற்கை முறைகளை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய இயற்கை முறைகளில் இதுவரை பலவற்றை பார்த்துள்ளோம். இப்போது அவற்றில் வீட்டில் எளிதில் கிடைக்கும் வகையில் உள்ள பொருட்களைக் கொண்டு, எப்படி முகப்பருக்களை போக்கலாம் என்று பார்ப்போமா!!!

டூத் பேஸ்ட்
முகப்பருக்களை போக்குவதில் டூத் பேஸ்ட் சிறந்ததாக உள்ளது. அதற்கு முகத்தை சுத்தமாக கழுவி, மாய்ச்சுரைசர் தடவியப் பின், சிறிது டூத் பேஸ்ட்டை பரு உள்ள இடத்தில் வைத்து வந்தால், பருவானது எளிதில் போய்விடும். குறிப்பாக அவ்வாறு டூத் பேஸ்ட்டை பயன்படுத்தும் போது, டூத் பேஸ்ட் ஜெல்லை பயன்படுத்தக் கூடாது. மேலும் பேஸ்ட் வைப்பதற்கு முன், அதனை ஒரு பருவில் வைத்து, ஏதேனும் எதிர்வினை தெரிகிறதா என்று பார்த்து விட்டு, பின் தடவ வேண்டும். ஏனெனில் சிலருக்கு இது அழற்சியை உண்டாக்கும்.

க்ரீன் டீ
முக அழகைக் கெடுக்கும் பருக்களைப் போக்குவதற்கு, க்ரீன் டீயும் ஒன்று. அதுவும் க்ரீன் டீயை, ஐஸ் ட்ரேயில் ஊற்றி, ஐஸ் கட்டிகளாக்கி, அதனை முகப்பருக்களின் மீது வைத்து தேய்த்து வந்தால், க்ரீயானது பருக்களில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, எளிதில் நீங்கிவிடும்.

கற்றாழை ஜெல் (Aloevera Jelly)
சூரியக் கதிர்கள் அதிகப்படியாக சருமத்தில் பட்டாலும், சருமத்தில் பருக்கள் வந்துவிடும். எனவே அத்தகையவற்றால் ஏற்பட்ட பருக்களையும், சூரியக்கதிர்களின் தாக்கத்தினால் ஏற்பட்ட சரும நிற மாற்றத்தையும் நீக்குவதற்கு, தினமும் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி, 5-10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதிலும் இதனை தினமும் இரவில் படுக்கும் போது செய்வது மிகவும் சிறந்த பலனைத் தரும்.

எலுமிச்சை சாறு
பருக்களை போக்கும் சிறந்த பொருட்களில் எலுமிச்சை சாறும் ஒன்று. அதற்கு தினமும் படுக்கும் போது எலுமிச்சை சாற்றை காட்டனில் நனைத்து, அதனை பரு உள்ள இடத்தில் வைத்து வந்தால், பருக்களில் உள்ள நீர்மமானது மற்ற இடங்களில் பரவாமல் இருக்கும். மேலும் பருக்களில் உள்ள கிருமிகளும் அழிந்து, பருக்களும் வற்றிவிடும்.

வினிகர்
வினிகர் மற்றும் உப்பை கலந்து, பரு உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி, பின் சுத்தமான துணியால் துடைத்து, எண்ணெய் இல்லாத மாய்ச்சுரைசரை தடவி வந்தால், சருமத்தில் இருந்து வெளிப்படும் அதிகப்படியான எண்ணெயின் வெளிப்பாடு தடைப்பட்டு, பருக்கள் மேலும் வராமல் தடுப்பதோடு, அந்த பருக்களை எளிதில் போக்கிவிடும்.

ரோஸ்வாட்டர்
சருமத்தை கிளின்சிங் செய்வதற்கு சிறந்த பொருள் என்றால் அது ரோஸ்வாட்டர் தான். அதிலும் ரோஸ் வாட்டரை எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து கலந்து, பரு உள்ள இடத்தில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனாலும் பருக்கள் போய்விடும்.

பழங்கள் மற்றும் காய்கறிகள்
பருக்களை போக்கும் சிறந்த வழிகளுள் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதும் ஒன்றாகும். ஏனெனில் உடலை சரியாக இயக்குவதற்கான போதிய சத்துக்களான வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருந்தால் தான், உடலானது சரியாக இயங்கும். அதிலும் பச்சை இலைக் காய்கறிகள், பெர்ரிப்பழங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். இல்லையெனில் இத்தகைய காய்கனிகளை பருக்கள் உள்ள இடங்களில் அரைத்து தடவி வந்தாலும், பருக்களை போக்க முடியும்.

கொழுப்பு கட்டி கரைய...

*சோற்று கற்றாழை சதை உடன் மஞ்சள் சேர்த்து தடவி வர குணமாகும்.

*மஞ்சள்தூளுடன் சிறிது ஆலிவ் ஆயி கலந்து கொழுப்பு கட்டிகள் மீது தடவி வரலாம்

*தினமும்சிறிது விளக்கெண்ணெய் கொழுப்பு கட்டிகள் மீது தடவி வந்தால் குறையும்.
இரத்தத்தை சுத்திகரிக்க உதவும் இயற்க்கை உணவுகள் !!
நமது உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் ரத்தம் இன்றியமையாதது. எனவே அத்தகைய இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். 

தவறும் பட்சத்தில் உடலில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, உடலின் உறுப்புக்கள் அனைத்தும் விரைவிலேயே செயல் இழக்க ஆரம்பிக்கும். 

இவ்வாறு அதிகப்படியான நச்சுக்கள் இரத்தத்தில் இருந்தால் தான், உடல் அசதி, வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள், அலர்ஜி, நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு, தொடர்ச்சியான தலை வலி போன்றவை ஏற்படும். 
 
இயற்கை உணவுகள் மூலம் இரத்தம் விருத்தியடைய :   

பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். 

இதுதவிர, செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது.

இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்க்கை உணவுகள் :

இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது

சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

இரத்த மூலம்

மலம் வெளியேறும்போது இரத்தமும் சேர்ந்து வெளியேறும். இதனை இரத்த மூலம் என்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் இரத்த மூலம் வெகுவிரைவில் குணமாகும்.

உடல் சூடு

உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்.

வயிற்றுக் கடுப்பு நீங்க

சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக்கடுப்பு உண்டாகும். இதனால் சீதக் கழிச்சல் ஏற்படும். இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம் , மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

பெண்களுக்கு

பெண்களுக்கு வாழைப்பூவை வரப்பிரசாதம் என்று சொல்லலாம். மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு உண்டாகும். அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி குறையும்.

வெள்ளைப்படுதல்

வெள்ளைப்படுதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகின்றது. இவர்கள் வாழைப்பூவை இரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.

கைகால் எரிச்சல் நீங்க

கை கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி கை கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் கை கால் எரிச்சல் குணமாகும்.

இருமல் நீங்க

வறட்டு இருமல் உள்ளவர்கள் வாழைப்பூ இரசம் செய்து அருந்திவந்தால் இருமல் நீங்கும்.

தாது விருத்திக்கு

வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து உண்டுவந்தால் தாது விருத்தியடையும்.

மலட்டுத்தன்மை நீங்க

சிலர் குழந்தையின்மையால் பல மன வேதனைக்க்கு ஆளாவர். இவர்களுக்கு வாழைப்பூ ஒரு வரப்பிரசாதம். வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர்

எதற்கு இலையில் முதலில் இனிப்பை வைத்தார்கள் ?  இனிப்பை முதலில் உண்ண வேண்டும். இனிப்பு சுவை நாக்கில் பட்டவுடன் மின்காந்த அலையாக மாறி நேரடியாக வயிற்றிற்கும், மண்ணீரலுக்கும் சக்தியை வழங்குகிறது. பின் நாம் என்ன சாப்பிட்டாலும் அது நன்கு செரிமானம் ஆகி நல்ல சத்துக்களாக இரத்தத்தில் கலக்கிறது. 



Wednesday, 11 May 2016

மூச்சு


ஞானம் அடைய தியானம் ஒன்றே வழி.

தியானத்தில் மூலம் தான் எண்ணங்கள் அற்ற நிலை அடைய முடியும்

எண்ணங்கள் அற்ற நிலை அடைந்தால் தான் ஐம்புலன்கள் தாண்டிய உண்மைகள் புலப்படும்

இன்னும் ஆழ்ந்து செல்ல செல்ல இப்பிரபஞ்சத்தின் பல்வேறு அதிர்வுகளை,அலைகளை அறிய,உணர முடியும்.

பிரபஞ்சத்தில் உள்ள படைப்பின் ஞானம் அனைத்தும் அதிர்வுகளாக அலைகளாக எங்கும் பரவி உள்ளன.

அதை உள்வாங்கிகொள்ளும் ஆற்றல் ஆள்நிலை தியானத்தில் தான் கிடைக்கும்.

அந்த தகவல்கள் அனைத்தையும் உள்வாங்கிகொள்ள உங்களால் முடிந்தால் உங்களுக்கும் அனைத்தும் புலப்படும்.நீங்களும் ஞானி தான்.

தேவை தியானம் மட்டுமே,இடை விடாத தியானம் மட்டுமே. 

வேற எதுவும் உங்களுக்கு உதவாது. நீங்கள் அறியும் அனைத்தும் தகவல் அறிவு(knowledge) தான். தகவல் அறிவு சுமை ஆகும்
+++++++++++++++++++++++++++++
உன் மூச்சு குறைய,
உயிர் மூச்சு உயரும் .
மூச்சுப் பயிற்சி மூலம் சுவாசத்தை
குறைக்கப் பழகிக் கொண்டால் ஆயுள் கூடும்.
நமது இடது நாசி சந்திரகலை. அதில் வரும்
காற்று குளிர்ச்சியாக இருக்கும். வலது நாசி
சூரியகலை. அதில் வரும் காற்று உஷ்ணமாக
இருக்கும். இரண்டு நாசிகளிலும் மூச்சுக்
காற்று வந்தால் சுழிமுனை என்பர். பொதுவாக
மழைக் காலங்களில் இயற்கையாகவே
சூரியகலையில் ஓடும். ஆதிக வெயில்
அடிக்கும் போது சந்திரகலையில் ஓடும். இது இயற்கையாகவே நடக்கும் அற்புதமாகும்.
ஏனெனில் உடலில் சூடும் குளிர்ச்சியும் சம நிலையில் இருக்க வேண்டும்.
இதில் எந்தக் குறைபாடு நேர்ந்தாலும் நமது
உடலில் பல உபாதைகள் ஏற்படும். ஒருவருக்கு
சூரியகலையில் சுவாசம் தொடர்ந்து மூன்று
நாட்கள் ஓடினால் ஒரு வருடத்தில் மரணம்
சம்பவிக்கும். ஒரே நாசியில் பத்து நாட்கள்
தொடர்ந்து ஓடினால் மூன்று மாதங்களில்
மரணம் சம்பவிக்கும். மூச்சுப் பயிற்சி மூலம்
சுவாசத்தை குறைக்க பழகிக் கொண்டால்
ஆயுள் கூடும். சுவாசம் அதிகரிக்க அதிகரிக்க
ஆயுள் குறையும். சுவாசத்தை அடக்குவதால்
ஆமைகளும் பாம்புகளும் அதிக நாட்கள்
உயிருடன் வாழ்கின்றன.
நாம் நடக்கும் போது
16 அங்குலமும்,
அமர்ந்திருக்கும் போது 12
அங்குலமும்,
ஓடும் போது 25 அங்குலமும்,
உறங்கும் போது 36 அங்குலமும்,
உடல்உறவு
கொள்ளும் போது 64 அங்குலமும் சுவாசம்
நடைபெறுகிறது.
சுவாசம் 11 அங்குலமாக குறைந்தால் உலக
இச்சை நீங்கும்.
10 அங்குலமாக குறைந்தால் ஞானம்
உண்டாகும்.
9 அங்குலமாக குறைந்தால் விவேகி ஆவான்.
8 அங்குலமாக குறைந்தால் தூர திருஷ்டி காண்பான்.
7 அங்குலமாக குறைந்தால் ஆறு சாஸ்திரங்கள் அறிவான்.
6 அங்குலமாக
குறைந்தால் ஆகாய நிலை அறிவான்.
5 அங்குலமாக குறைந்தால் காய சித்து உண்டாகும்.
4 அங்குலமாக குறைந்தால் அட்டமா சித்து உண்டாகும்.
3 அங்குலமாக குறைந்தால் நவ கண்ட சஞ்சாரம் உண்டாகும்.
2 அங்குலமாக குறைந்தால் கூடுவிட்டு கூடுபாய்தல் சித்திக்கும்.
1 அங்குலமாக குறைந்தால் ஆன்ம தரிசனம், உதித்த இடத்தில் நிலைத்தல், சமாதி நிலை அன்னபாணம் நீங்கும்.

Sunday, 1 May 2016

மயில் இறகு

மயில் இறகின் மகத்துவம்


மயில் இறகு என்று கேட்டதும், சிறு வயதில் மயில் இறகை புத்தகத்தினுள் வைத்து, அது குட்டி போடும் என்று நம்பி பலர் வைத்திருந்தது கட்டாயம் ஞாபகத்திற்கு வரும்.

மேலும், மயில் கடவுள் முருகனின் வாகனம் என்பதால், அதன் இறகை புனிதமானதாக கருதி, பலரும் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம்.

ஆனால் இந்த மயில் இறகு பல தோஷங்களை நீக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

சனி தோஷம்

மூன்று மயில் இறகை ஒன்று சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு ‘ஓம் சனீஸ்வராய நமஹ’ என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் சனி தோஷம் நீங்கும்.

வாஸ்து தோஷம்

வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க எட்டு மயில் இறகை ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும்.

அலுமாரி

நகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியில் ஒரு மயில் இறகை வைக்க வேண்டும். இதனால் அந்த அலமாரியில் செல்வம் அதிகம் சேர்வதோடு, நிலைக்கவும் செய்யுமாம்.

எதிர்மறை ஆற்றல்கள்

மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.

அலுவலக இடம்

ஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயில் இறகை வைப்பதன் மூலம், அவரது இடத்தின் அழகு மேம்படுவதோடு, உற்பத்தி திறனும் அதிகரிக்குமாம்.

பூச்சிகள் வராது

மயில் இறகு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். அதுவும் இதனை வீட்டின் சுற்றில் வைத்தால், பல்லிகள் மற்றும் இதர பூச்சிகள் வருவதைத் தடுக்கலாம்.

அன்யோன்யம் மற்றும் புரிதல்

திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் மற்றும் புரிதல் அதிகரிக்கும்

பகிர்வில் ர.சடகோபால்