ஸ்ரீ தேவ கன்னிகா மஹா மந்திரம்
தியானம்:
மின்னலை யொத்த திருமேனி அழகும் இரண்டும் கரங்களில் பாரிஜாத மலரும் வெண்மையான ஆடையும் நவரத்ன கிரீடமும் தரித்து புன்முறுவலுடைய முக மண்டலமும் ஆகிய மோகன வடிவமான தேவ கன்னிகையை துதிக்கிறேன்.....
மூல மந்திரம்:
"ஓம் க்லீம் நமோ பகவதி சுரலோகவாகினி சர்வலோக வஸங்கரி க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஓம் சுர சுந்தரி தேவ கன்னிகாயை ஸ்வாக"
பூஜை முறைகள் :
பால் ,பழம் ,தேன்,வாசனை திரவியம் , சர்க்கரை பொங்கல், முதலியன வைத்து கணபதியை வணங்கி வடக்கு முகமாக அமர்ந்து 1008 உரு வீதம் 40 நாட்கள் ஜெபிக்க மந்திரம் சித்தியாகி தேவி பிரசன்னமாகும்..
இதன் பலன் :
முக்காலமும் சொல்லும் அஷ்டகர்மமும் சித்தியாகும். அறுபத்துநாலு சித்துகளும் ஆடலாம். மேலும் ஜால வித்தைகள், மை முறைகள் பற்றி அறிந்து கொள்ளலாம்..
++++++++++++++++++++++++++++++++
காதல் திருமணம் நினைத்தபடி நடக்க
வெள்ளிக்கிழமை பூஜை அறையில் கணபதிக்கு பூஜை செய்து பின் குலதெய்வத்தை வேண்டி சூரிய அஸ்த்தமனம் ஆன பின் வீட்டிற்கு அருகில் உள்ள மாயாஜால மோகினி எனும் குப்பைமேனி செடிக்கு சாபநிவர்த்தி செய்து நம் நிழல் அதன் மீது படாமல் வேரை எடுத்து கொள்ளவேண்டும். பின் அந்த வேரை வாழை இலையில் வைத்து நல்லெண்ணெய் ,தேங்காய் எண்ணெய் , வெப்ப எண்ணெய் இம் மூன்றும் கலந்து வேருக்கு பூசி பூஜையில் வைத்து
நெய்வேத்தியமாக சந்தனம்,தேன் வைத்து புனுகு,ஜவ்வாது,பன்னீர், முதலியவை பூஜை அறையில் தெளித்து வேருக்கு முல்லை மலர் அணிவித்து நாம் திருமணம் செய்ய விரும்பும் நபரின் போட்டோவை மோகினி தேவதையை வணங்க வேண்டும்.....
மூலமந்திரம்:
"ஓம் க்லீம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ வசிய மோகினி [பெயர்]வசிய மோகனம் ஆகர்ஷணம் ஸ்வாக"
தினமும் 108 முறை 12 நாட்கள் ஜெபிக்க மந்திரம் சித்தியாகும்.
நெய்வேத்தியமாக சந்தனம்,தேன் வைத்து புனுகு,ஜவ்வாது,பன்னீர், முதலியவை பூஜை அறையில் தெளித்து வேருக்கு முல்லை மலர் அணிவித்து நாம் திருமணம் செய்ய விரும்பும் நபரின் போட்டோவை மோகினி தேவதையை வணங்க வேண்டும்.....
மூலமந்திரம்:
"ஓம் க்லீம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ வசிய மோகினி [பெயர்]வசிய மோகனம் ஆகர்ஷணம் ஸ்வாக"
தினமும் 108 முறை 12 நாட்கள் ஜெபிக்க மந்திரம் சித்தியாகும்.
++++++++++++++++++++++++++++++++++
அகாரம் உகாரம்
பகரக்கேள் புலத்தியனே தேகம் சித்தி
பராபரமுள் ளுரவாய் வாயுவாச்சு
நிகரில்லை ரெண்டுமென்றாய் நிலைத் தாலே
முத்தி நினைவாக மவுனத்தின் வீடு கேளு
புகலவே அகாரமதை கீழே தாக்கி
புரிந்துநின்றால் உகாரமதை மேலே சேர்த்து
உதரக்கேள் மகாரத்தின டுவே நின்று
உற்றுப்பார் பூரணத்தின்ஒ ளிகாண்பாயே
பூரணத்தின் மகிமையை உணர புலத்தியனே முதலில் உடலை தயார் படுத்த வேண்டும். அடுத்து உடலுக்குள்ளே உள்ள வாசியை நிறுத்தி இரண்டுக்கும் ஒன்றாக கலந்தால் முக்தி கிடைக்கும், அகாரத்தை கிழே செலுத்தி உகாரத்தை மேலே செலுத்தி மகாரத்தின் நடுவே நிற்க வேண்டும். அவ்வாறு செய்து உற்று பார்த்தால் பூரணத்தின் ஒளியை காணலாம்...
காணப்பா சக்திசிவம் ஒன்ற தாகக்
கலந்திருப்பார் ஒருவருமே காணார் காணார்
தேன்போல யருவியங்கே பாயும் வீடு
திருவான சுழிமுனையில்தி றமாய் நின்றால்
தான்போல தானுள்ளே தானே தோணும்
தனதாக முமங்கே தானே தோணும்
வீணப்பா வலைந்து கெட்டுத் திரியவேணாம்...
- அகத்தியர் பரிபூரணம் 400
பொருள்:
சக்தி சிவம் இரண்டும் ஒன்றாய் கலந்து இருக்கும்.
ஒருவரும் கண்டிருக்க மாட்டார்கள். தேன் போல அருவி அங்கே பாயும். சுழுமுனையில் திறமாக நின்றால் தன்னைத்தானே உள்ளே காணலாம் . முகம் உள்ளே தோன்றும்.வீணாக மற்றவைக்கெல்லாம் அலைந்து திரிய வேண்டாம்
